உலகின் மிகப் பெரிய வளர்ந்து வரும் பொருளாதாரப் பிராந்தியமான இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விருப்பமாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

“இன்று உலகில் எந்த ஒரு நாடும் தனித்து முன்னேற முடியாது, உலகில் உள்ள அனைத்து வளர்ந்த நாடுகளும் பிராந்திய பங்காளித்துவத்தின் மூலம் முன்னேற்றம் கண்டுள்ளன” என்று கூறிய அமைச்சர், இந்திய-இலங்கை உறவுகளை இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் மற்றும் அச்சுறுத்தல் இல்லாத வகையில் அபிவிருத்தி செய்து இலங்கையின் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே ஜனாதிபதியின் வேலைத்திட்டமாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ இந்தியா விஜயம் தொடர்பில் அறிவிப்பதற்காக இன்று (22) முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் சப்ரி இதனைத் தெரிவித்தார்.

 



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *